ஆசியா

அமெரிக்கா – சீனா இடையில் வர்த்தக போர் – சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயம்

சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருள்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து இறங்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களின் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 145 சதவிகிதம் கூடுதல் வரி விதித்துள்ளார்.

இந்த வரி விதிப்பில் சீனாவில் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்ட பொருள்களும் அடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க சந்தைகளில் விற்பனையாகும் விளையாட்டு பொருள்களில் 77 சதவிகிதம் சீனாவில் தயாரிக்கப்படுபவையாகும்.

எனவே, அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் அங்கு விற்பனைச் செய்யப்படும் விளையாட்டு பொம்மைகளின் விலையானது விண்ணைத் தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் பொம்மைகள் மற்றும் சிறார் பொருள்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் லியாங் மெய் கூறுகையில், அமெரிக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்காக ஏதேனும் பொருள்கள் வாங்க வேண்டுமென்று சந்தைக்குச் சென்றால் அங்கு விலைவுயர்ந்த பொருள்களைதான் அதிகம் பார்ப்பார்கள் என விமர்சித்துள்ளார்.

புகழ்பெற்ற பார்பி பொம்மைகளைத் தயாரிக்கும் மேட்டல் போன்ற நிறுவனங்கள் கூடுதல் வரிகளைச் சமாளிக்க பொம்மைகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டின் மொத்த அமெரிக்க பொம்மை சந்தையின் விற்பனை 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்