IPL Match 25 – 103 ஓட்டங்களுக்கு சுருண்ட சென்னை அணி

ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ரகானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிஎஸ்கே-வுக்க முதல் ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் கிடைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சீசனில் பவர்பிளேயில் 2ஆவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்.
பவர்பிளேக்கு பிறகு அனைத்து வீரர்களும் தடுமாறிய நிலையில் சென்னை அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்தது. துபே 29 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
(Visited 2 times, 1 visits today)