உலகளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய அதிகரிப்பு
உலகளவில் தங்கத்தின் விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கத்தின் விலை சுமார் 28 கிராமுக்கு 3,200 டொலராக பதிவாகியுள்ளது.
வலுவிழந்திருக்கும் அமெரிக்க டொலர், மோசமடையும் வர்த்தகப் போர் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நாடிச் செல்கின்றனர்.
தங்கக் கட்டிகளின் விலை ஒரே வாரத்தில் 5 சதவீதம் கூடியது.அமெரிக்காவின் தங்க முதலீடுகள் சுமார் 2 சதவீதம் அதிகரித்தன.
தற்போது வலுவிழந்திருக்கும் அமெரிக்க டொலர் தங்க விலையை உயர்த்தியதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தங்கக் கட்டிகளை வாங்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.





