கருங்கடல் தானிய ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கு சாத்தியம்!

கருங்கடல் தானிய ஒப்பந்தம் நாளை காலாவதியாகவுள்ள நிலையில், அதற்கு முன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக துருக்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
கருங்கடல் வழியாக உக்ரேனிய பொருட்களை பாதுகாப்பான ஏற்றுமதிக்கு வழிவகுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுக்கள் இன்றும் தொடர்ந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும் குறித்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா ஒப்புக் கொள்ளவில்லை. போரினால் மோசமடைந்துள்ள உலகளாவிய உணவு நெருக்கடியைச் சமாளிக்க ஐக்கிய நாடுகள் சபையும் துருக்கியும் கடந்த ஜூலையில் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
ஒப்பந்தம் நிறைவடையவுள்ள நிலையில், உக்ரைனின் கடைசி கப்பல் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)