அமெரிக்கா மீது பிரித்தானியா விதித்துள்ள அடிப்படை வரி அமுலுக்கு வந்துள்ளது!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்கு அதிகரித்த வரிகளை அமல்படுத்தத் தொடங்கியதால், அமெரிக்காவிற்குள் இங்கிலாந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரியானது இன்று (05.04) முதல் அமுலுக்கு வருகிறது. அமெரிக்க துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுங்கக் கிடங்குகளில் இந்த வரி அமுலுக்கு வந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோயிற்கு பிறகு இங்கிலாந்தின் முக்கிய FTSE-100 பங்குச் சந்தை அதன் மோசமான ஒரு நாள் சரிவைச் சந்தித்தது. இதனையடுத்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்கா மீது பழிவாங்கும் வரிகளை விதிப்பதற்கு எதிராக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் ஜியான்கார்லோ ஜியோர்கெட்டி எச்சரித்துள்ளார்.
எதிர் நடவடிக்கைகளைத் தொடங்குவது “அனைவருக்கும், குறிப்பாக எங்களுக்கும் தீங்கு விளைவிக்கும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் இந்த பிரச்சினையை கையாள்வது குறித்து இந்த வாரத்தில் உலக தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.