மஹிந்த அரசாங்கம் எடுத்த தவறான முடிவு – குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்ஷ

மஹிந்த அரசாங்கத்தில் ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவு தவறானதென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த முடிவை தாம் அங்கீகரிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறினார்.
கடந்த காலங்களில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறானவை என்று தாம் இன்னும் நம்புவதாக நாமல் ராஜபக்ஷ கூறினார்.
முந்தைய அரசாங்கங்கள் எடுத்த இதுபோன்ற தவறான முடிவுகளை தற்போதைய அரசாங்கம் எடுக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்கோன் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
பொலிஸ் மா அதிபருடன் அரசாங்கத்திற்குத் தனிப்பட்ட பிரச்சினை இருப்பது போல் தமக்குத் தெரிவதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.