கண்களைச் சுற்றிக் கருவளையம் – காரணத்தை கண்டுபிடித்த மருத்துவர்
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட எதிர்நோக்கும் சருமப் பிரச்சினைகளில் ஒன்றாக கண்களைச் சுற்றிய கருவளையம் ஏற்பட்டுள்ளது.
தூக்கமின்மையால்தான் கருவளையம் ஏற்படுகிறது என்பது பரவலான கருத்தாகும்.
ஆனால், அது முற்றிலும் உண்மையில்லை என சிங்கப்பூர் மகளிர், குழந்தை மருத்துவமனையில் பணிபுரியும் தோல் மருத்துவர் உமா அழகப்பன் தெரிவித்துள்ளார்.
கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படப் பல காரணங்கள் உண்டு என மருத்துவர் அழகப்பன் கூறினார்.
அவற்றில் சில…
கண்களுக்குக் கீழ் உள்ள பகுதி மெல்லியதாகவும் அதிகமான ஒளி கசியும் தன்மையும் (translucent) கொண்டதாக இருக்கும்போது கருவளையம் ஏற்படலாம்.
முதிர்ச்சியினாலும் கண்களுக்குக் கீழ் உள்ள பகுதியில் நிற பாதிப்பு ஏற்படும் (pigmentation).
கண்களுக்குக் கீழ் உள்ள கொழுப்பு, மீள்திறன் (elastic) ஆகிய திசுக்கள் குறையும்போது கருவளையம் ஏற்பட வாய்ப்புள்ளது.
உரிய காரணத்தைக் கண்டுபிடித்த பின்னரே, அதற்கு சிகிச்சை அளிக்க முடியும் என்றார் சரும மருத்துவர்.