ரஷ்யா உண்மையில் போர் நிறுத்தத்தை ஆதரிக்கிறதா? – நிரூபிக்குமாறு வலியுறுத்தும் செலன்ஸ்கி!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடற்படை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்குதல்களை இடைநிறுத்துவதற்கான ஒரு புதிய சாத்தியமான ஒப்பந்தத்தின் வெற்றி மாஸ்கோவைப் பொறுத்தது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலான முழு அளவிலான போருக்குப் பிறகு கியேவ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நம்பவில்லை என்று எச்சரித்தார்.
“நாங்கள் அவர்களை நம்பவில்லை. வெளிப்படையாகச் சொன்னால் – உலகம் ரஷ்யாவை நம்பவில்லை. மேலும் அவர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர உண்மையிலேயே தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
“மீண்டும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் இருந்தால், கருங்கடலில் புதுப்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் இருந்தால், ரஷ்ய கையாளுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் – புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.