ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் ஸ்திரத்தன்மை காரணமாக ஒரு அரச தலைவர் இலங்கைக்கு வருகை தருவதாகவும் கூறினார்.
இரண்டு மாதங்களுக்குள் சியம்பலாண்டுவவில் புதிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தையும், மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தையும் அமைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
(Visited 29 times, 1 visits today)