இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையில் மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லி மீற்றருக்கு மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் .
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)