குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய திட்டமிடும் டெஸ்லா

குறைந்த விலை இலத்திரனியல் கார்களை டெஸ்லா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெஸ்லாவின் பிரபல மாடலான Y ரக கார்களை குறைந்த விலையில் விற்பனை கொண்டு வர உள்ளதாக தெரியவந்துள்ளது.
நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் இந்த கார்கள் விற்பனைக்கு வரக்கூடுமென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன சந்தையில் பிஒய்டி, மற்றும் சியோமி கார்களுடனான போட்டியை சமாளிக்க டெஸ்லா குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
(Visited 4 times, 4 visits today)