மலேசியாவில் தயாரிக்கப்பட்ட காபி தயாரிப்புகளுக்கு தடை விதித்த சிங்கப்பூர்!

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட காபி தயாரிப்பில் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து இருப்பதாக அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த காபி தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது.
உள்ளூர் மின் வணிக தளங்களில் விற்கப்படும் உடனடி காபி கலவையான கோபி பெனும்புக்கில் மருத்துவ மேற்பார்வை தேவைப்படும் சக்திவாய்ந்த மருந்தான தடாலாஃபில் இருப்பதை சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) கண்டறிந்ததாகக் கூறியது.
ஆண் பாலியல் செயல்திறனை மேம்படுத்துவதாகக் கூறி இந்த தயாரிப்பு விளம்பரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் உடனடியாக தயாரிப்பை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு அந்தந்த விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)