279 டன் எடையுள்ள ரயிலை பற்களால் இழுத்து சாதனை படைத்த எகிப்திய மல்யுத்த வீரர்!

கபோங்கா என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் எகிப்திய மல்யுத்த வீரர் அஷ்ரஃப் மஹ்ரூஸ் பற்களால் ரயில் ஒன்றை இழுக்க முற்பட்டுள்ளார்.
மஹ்ரூஸ் தனது பற்களை மட்டுமே பயன்படுத்தி அதிக எடை கொண்ட ரயில் இழுப்பு உட்பட மூன்று பிரிவுகளில் கின்னஸ் உலக சாதனைகளால் முறையான அங்கீகாரத்தைப் பெற்றார்.
இரண்டு டன் லோகோமோட்டிவ்வை 40 வினாடிகளுக்குள் இழுத்ததாக அவர் கூறுகிறார்.
கெய்ரோ நகர மையத்தில் உள்ள ராம்செஸ் ரயில் நிலையத்தில் 279 டன் எடையுள்ள ஒரு ரயிலை – கிட்டத்தட்ட 10 மீட்டர் (33 அடி) தூரம் தனது பற்களால் ரயிலில் கட்டப்பட்டிருந்த கயிரை இழுந்துள்ளார்.
40 வயதுடையவரும், எகிப்திய தொழில்முறை மல்யுத்த வீரர்களுக்கான கூட்டமைப்பின் தலைவருமான மஹ்ரூஸ், பிப்ரவரி 2024 இல் 30 வினாடிகளில் 11 பச்சை முட்டைகளை உடைத்து சாப்பிட்டதற்காகவும், ஜூன் 2021 இல் 15,730 கிலோகிராம் எடையுள்ள டிரக்கை தனது பற்களால் இழுத்ததற்காகவும் முன்னர் அங்கீகரிக்கப்பட்டார்.