சிரியாவில் 14 ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு

சிரியாவில் 14 ஆண்டு கால பிரச்னைக்குத் இடைக்கால அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் SDF என்ற சிரியன் ஜனநாயகப் படையினர், அரசு நிறுவனங்களில் இணைந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட இடங்களில் SDF படையினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிரியாவின் எண்ணெய் வளங்கள் நிறைந்த வட கிழக்குப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள, SDF படையுடன் 14 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக, இடைக்கால அதிபர் அஹ்மத் அல் ஷாரா தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)