பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது!

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடெர்டேயை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.
அவர் பதவியிலிருந்தபோது போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்களைக் கொன்று போதைப்பொருட்களுக்கு எதிரான இரத்தக்களரிப் போரை மேற்பார்வையிடுவதில் அவர் பங்காற்றியதாகத் தெரிவித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மணிலாவின் பிரதான விமான நிலையத்திற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது ரொட்ரிகோ போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் உள்ள மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டணி இந்த கைது நடவடிக்கையை வரலாற்றில் மிக முக்கியமான தருணம் எனக் கூறியுள்ளது.