கழிவறைகள் தேங்கியதால் ஏற்பட்ட பதற்றம் : இலக்கை அடைய முடியாமல் திரும்பிய விமானம்!

சிகாகோவில் இருந்து டெல்லி சென்ற விமானம் ஏறக்குறைய ஐந்து மணி நேரத்திற்கு பிறகு அமெரிக்க நகரத்திற்கு திரும்பியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக AI126 விமானம் சிகாகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறைந்தது ஒன்பது கழிவறைகள் அடைக்கப்பட்டதால் நடுவானில் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பயணிகளை அவர்களின் இறுதி இலக்குக்கு கொண்டு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் கூறியது.
போயிங் 777-300 ER ஜெட் விமானத்தில் உள்ள 10 கழிவறைகளில் ஒன்பது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)