சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்?

டுபாயில் இன்று நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்று மதியம் 2.30 அளவில் போட்டி தொடங்கும், அதற்கு முன் 2 மணிக்கு டாஸ் போடப்படும். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி என்பது இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இரு அணிகளுக்கும் இடையே ஒருஇறுதி போட்டி நடந்தது, அதில் இந்திய அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 25 வருட தோல்விக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன், ரோஹித் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெறும் நோக்கத்துடன் களமிறங்கும். அதற்கு முட்டு கொடுத்து பயங்கர பார்மில் இருக்கும் நியூசிலாந்து அணி பயங்கர டஃப் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதனிடையே, நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கான டுபாய் மைதானத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. முதல் பார்வையில், பிட்ச் சற்று வறண்டதாகத் தெரிகிறது. முந்தைய போட்டிகளைப் போலவே, மேற்பரப்பு மந்தமாகத் தெரிகிறது. இதனால் பந்து மேலும் சுழலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவறை டுபாயில் நடைபெற்ற போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த பரபரப்பான போட்டிக்கு முன் துபாய் மைதானத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
பிட்ச் ரிப்போர்ட்
துபாய் சர்வதேச மைதானத்தில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி, 50 ஓவர் முழுக்க விளையாடினார்கள் என்றால் சுமார் 270-280 ரன்கள் எடுக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்பு
Accuweather இன் படி, நாளை நடைபெறும் துபாய் சர்வதேச மைதான பகுதிகளில் வெப்பநிலை பிற்பகலில் சுமார் 34°C ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை நேரம் செல்லச் செல்ல, வெப்பநிலை சரியாக 24°C ஆகக் குறையும். இதனால், தெளிவான வானம் இருக்கும், மழை பெய்ய வாய்ப்பில்லை.
இந்திய அணி :
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான அணியில், கே.எல். ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளனர்.
நியூசிலாந்து அணி:
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான அணியில், கேப்டன் டாம் லாதம், வில் யங், ரச்சின் ரவீந்திர, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க், நாதன் ஸ்மித், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி ஆகியோர் உள்ளனர்.
போட்டி ரத்தானால், கோப்பை யாருக்கு?
ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டால், இரு அணிகளின் 25 ஓவர்களின் ஸ்கோரை வைத்து முடிவு அறிவிக்கப்படும். ஒருவேளை இப்போட்டி மழையின் காரணமாகவோ அல்லது வேறு காரணத்தினாலோ பாதிக்கப்பட்டால் ஐசிசி விதிப்படி, மழையால் மொத்த ஆட்டமே ரத்தானால், ரிசர்வ் நாளுக்கு போட்டி ஒத்தி வைக்கப்படும்.
அதாவது, அடுத்த நாள் (மார்ச் 10) மீண்டும் நடத்தப்படும். அன்றைய தினமும் போட்டி நடைபெறாமல் போகும்பட்சத்தில், இந்தியா – நியூசிலாந்து ஆகிய 2 அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு சாம்பியன்ஸ் டிராபி பகிர்ந்து அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.