மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் – ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா-உக்ரைன் போரை தடுத்து நிறுத்தா விட்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போரே தொடங்கியிருக்காது என டிரம்ப் தெரிவித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், உக்ரைனிடம் எந்தப் பிடிமானமும் இல்லாத நிலையில் அதனை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாகவும் ரஷ்யாவோடு பேச்சு நடத்துவது சுலபமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, இந்தியாவில் எந்த அமெரிக்கப் பொருளையும் விற்க முடியாதபடி கடுமையாக வரி விதிக்கப்படுவதாக டரம்ப் விமர்சித்துள்ளார்.
அத்துடன் யாரோ அம்பலப்படுத்தியதால் இந்தியா வரிகளை குறைக்க முன்வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.