அமெரிக்க – உக்ரேன் ஜனாதிபதிகளுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு

அமெரிக்காவுக்கும் உக்ரேனுக்கும் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெறும் என உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேன்-ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் சந்திப்பு அடுத்த வாரம் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
உக்ரேன் ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சந்திப்பு வாக்கு வாதத்தில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)