ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த இளைஞனால் பதற்றம்!

துப்பாக்கி ஏந்திய ஒரு இளைஞன் பாதுகாப்பு வேலியை மீறி வணிக விமானத்தில் ஏற முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
17 வயது இளைஞன், ஒரு துப்பாக்கியுடன் சிட்னிக்குச் செல்லும் ஜெட்ஸ்டார் விமானத்தில் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.
விமான நிலைய வேலியில் உள்ள ஒரு துளை வழியாக அந்த இளைஞன் ஏறி, முன் படிக்கட்டுகளில் விமானத்தின் கேபினுக்குள் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
பராமரிப்பு ஊழியராக உடையணிந்த இளைஞன் துப்பாக்கியை ஏந்தியிருப்பதை மூன்று பயணிகள் கவனித்ததாகவும், போலீசார் வருவதற்கு முன்பு அவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.