சீனாவில் பெண்களின் திருமண வயதில் ஏற்படவுள்ள மாற்றம்

சீனாவில் பெண்களின் திருமண வயதை குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
20ல் இருந்து 18 ஆக வயது குறைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.
சீனாவில் தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும் பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ளது. உலக அளவில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகமாகும்.
இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்துள்ளது. 2024இல் மக்கள் தொகை 14 லட்சம் குறைந்து 140.8 கோடியாக இருந்தது.
சீனாவில் குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை எனக் கூறப்படுகிறது.
திருமணம் செய்துகொள்ள விரும்பாததும், திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாததும் சீன அரசு சந்திக்கும் சவாலாக உள்ளது. முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இதனால், பெண்ணின் திருமண வயதை 18 ஆக குறைக்க சீன அரசின் தேசிய அரசியல் ஆலோசகர் சென் சோங்ஸி பரிந்துரை செய்துள்ளார்.
இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்க இந்த நடவடிக்கை உதவும் எனப் பரிந்துரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.