நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து நாளை (மார்ச் 5) நடைபெறவிருந்த நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த அடையாள வேலை நிறுத்தத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட GMOA, தமது கோரிக்கைகள் மீதான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்கு கால அவகாசம் வழங்கி வேலைநிறுத்தம் மார்ச் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
மருத்துவர்களின் கொடுப்பனவுகளை குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மார்ச் 5 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை GMOA நேற்று அறிவித்தது.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் கணிசமான குறைப்புக்கள் உள்ளதாகவும், இது மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்றும் GMOA தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)