அமெரிக்க வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்குத் திறக்குமாறு கோரிக்கை

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் நேரடி விமானச் சேவையை தொடங்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ரஷ்யா இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்குத் திறக்குமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.
இருநாடுகளின் அரசதந்திர உறவை மேம்படுத்துவது பற்றி அமெரிக்காவும் ரஷ்யாவும் சந்தித்துப் பேசின.
முன்பு இருந்த அமெரிக்க நிர்வாகங்களோடு ரஷ்யா கொண்டிருந்த அதிருப்திகளைக் களைவதில் கவனம் செலுத்தப்பட்டதாக ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உக்ரேனின் நட்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரஷ்ய விமானங்கள் தங்களுடைய வான்வெளியில் பறக்கத் தடை விதித்தன.
சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டது. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆக்கக்கரமான பேச்சு வார்த்தைகளை நடத்தியதாகக் கூறப்பட்டது.