சூர்யாவின் ரசிகர்களுக்கு இது பொற்காலம்.. அப்படி என்ன இருக்கும்?

சூர்யாவின் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த அவருடைய ரசிகர்களுக்கு இது பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் வரும் மே மாதம் ஒன்றாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷங்க போன்ற தொடர் ஹிட் படங்களை கொடுத்த ஆர் ஜி பாலாஜி சூர்யாவுடன் படம் பண்ண இருப்பது ரசிகர்களுக்கு அடுத்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சூர்யா ரசிகர்களின் பல வருட எதிர்பார்ப்பாக இருந்த வாடிவாசல் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இருந்தாலும் பட வேலைகள் ஆரம்பிக்கவில்லை.
இதற்கு காரணம் வெற்றிமாறன் விடுதலை படத்தின் பிசியாக இருந்தது தான் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெற்றிமாறன் மற்றும் சூர்யா வாடிவாசல் படப்பிடிப்பில் இணைய போவதை உறுதிப்படுத்து இருந்தார்.“
இந்த நிலையில் வெற்றிமாறன் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறார்.
மேலும் இந்த படம் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதேபோல் சிறு வேடம் சிறு பகுதி என்றாலும் மனதில் இன்றும் இருக்கும் விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரெக்டர் “ரோலெக்ஸ்” படமும் ரெடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.