வரலாற்றை கையிலெடுத்த மோகன் ஜி.. வெளியான புது அப்டேட்

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பழைய வண்ணாரபேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ரதாண்டவம்’, ’பகாசூரன்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்து இயக்கும் படத்துக்கு ‘திரௌபதி 2’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகன் ஜி வெளியிட்ட பதிவில், ஜிப்ரான் இசை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னணி இசையா அல்லது இரண்டு இசையமைப்பாளர்களா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘திரௌபதி 2’ படத்தின் போஸ்டரில், “14-ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட போசளர்களின் செந்நீர் சரிதம்” குறிப்பிடப்பட்டுள்ளது. கழுகு, போர், கோட்டைகள், கோயில் என சரித்திர படமாக இருக்கும் என்பதை போஸ்டர் உணர்த்துகிறது.