தண்ணீரில் ஓடக்கூடிய கார்களை உற்பத்தி செய்யும் எகிப்திய நிறுவனம்!

தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றங்களுக்கு சான்றாக மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
எகிப்திய நிறுவனம் ஒன்று தண்ணீரில் ஓடக்கூடிய கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
“ஜெட் கார் குரோம்” என்பது ஒரு எகிப்திய தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனமாகும்.
2019 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் டாலர் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த கார் திட்டம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தண்ணீரில் ஓடக்கூடிய இந்த கார்களை உருவாக்கிய பிறகு, கண்டுபிடிப்பாளர்கள் அவற்றை எகிப்தின் வடக்கு கடற்கரையில் ஓட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிறுவனம் தற்போது 950க்கும் மேற்பட்ட கார்களை உற்பத்தி செய்துள்ளது. ஒரு காரை தயாரிக்க 20 நாட்கள் ஆகும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)