அமெரிக்க குடியுரிமை பெற விரும்புபவர்களுக்கு டிரம்பின் அதிரடி உத்தரவு

அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் குடியுரிமை பெறும் வாய்ப்பை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு 5 மில்லியன் டொலர் கொண்டு செல்வோருக்குப் பொன் அட்டை வழங்கப்படும் எனவும் அது குடியுரிமை பெற பாதை வகுக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நிறுவனங்கள் படித்தவர்களை நாட்டுக்குள் கொண்டுவர அந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய ஒரு மில்லியன் பொன் அட்டைகள் விற்கப்படலாம் என்று அவர் கூறினார்.
பெரும் செல்வந்தர்கள் பொன் அட்டைகளை வாங்க அமெரிக்காவுக்கு வருவார்கள். அவர்கள் நிறையப் பேரை வேலைக்கு எடுப்பார்கள்.
நிறைய வரி செலுத்துவார்கள். இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்று திரு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டு வாரத்தில் திட்டம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.