CT Match 03 – ஆப்கானிஸ்தான் அணிக்கு 316 ஓட்டங்கள் இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரரான ரியான் ரிக்கில்டன் மற்றும் கேப்டன் பவுமா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
கேப்டன் பவுமா 58 ஓட்டங்களும் ரிக்கில்டன் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவர்களில் சிறப்பாக ஆடிய ஏய்டன் மார்க்ரம் 52 ரன்களை எடுத்தார்.
இன்னிங்ஸ் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும் பரூக்கி, அசமதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
(Visited 3 times, 1 visits today)