இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – அறிமுகமாகும் புதிய சட்டம்

இலங்கை விரைவில் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நீதிமன்றத்திற்கு சாட்சியாளர்களை நீதிமன்றத்திற்கு நேரடியாக கொண்டு செல்வதற்கும், வாக்குமூலங்களை ஒன்லைனில் பதிவு செய்வதற்கும் அனுமதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நேற்று காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சட்டதரணியாக மாறுவேடமிட்ட ஒரு துப்பாக்கிதாரி, தற்போது நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு வந்திருந்த பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அதற்கமைய, புதிய சட்டம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
சம்பவத்தையடுத்து அனைத்து நீதிமன்றங்களிலும் அதைச் சுற்றியும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.