ஆஸ்திரேலியாவில் ஆபத்தான குடியேறிகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு : நாடுகடத்தப்படும் குற்றவாளிகள்!

ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஆபத்தான குடியேறிகளை இனி காலவரையின்றி சிறையில் அடைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலை குற்றவாளி உட்பட மூன்று வன்முறை குற்றவாளிகளை ஆஸ்திரேலியா விரைவில் நவ்ருவுக்கு நாடு கடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் டோனி பர்க் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகளுக்கு நவ்ருவிற்கான விசா வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நவ்ரு ஒப்பந்தம் இருந்தபோதிலும், நாடு கடத்த முடியாத குற்றவியல் பதிவுகளைக் கொண்ட 200 க்கும் மேற்பட்ட குடியேறிகள் ஆஸ்திரேலியாவில் இருப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் இன்று கூறியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)