இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தொடரும்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/image_c435a750f0.jpg)
இலங்கையில் நிலவும் தற்போதைய வெப்பமான வானிலை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க குறிப்பிட்டார்.
(Visited 2 times, 2 visits today)