லிபியாவில் மாநில அமைச்சர் மீது கொலை முயற்சி! வெளியான அதிர்ச்சி தகவல்
தலைநகர் திரிபோலியில் புதன்கிழமை அவரது கார் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, லிபிய மாநில அமைச்சர் ஒருவர் படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
திரிபோலியை தளமாகக் கொண்ட தேசிய ஒற்றுமை அரசாங்கம் (GNU) தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது,
அதில் ஒரு இனம் தெரியாத குழு ஒரு நெடுஞ்சாலையில் பயணித்த அமைச்சரவை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் அடெல் ஜுமாவின் வாகனத்தை நேரடியாக சுட்டதாகக் கூறியது.
உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை, ஜும்மாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் “சம்பவத்தின் சூழ்நிலைகளை வெளிக்கொணரவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்” என்றும் கூறியது.
(Visited 1 times, 1 visits today)