உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியல் வெளியானது
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/762c355f-05f8-4bed-a243-3100568f41b2.jpg)
உலக அளவில் ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் டென்மார்க்கும், பின்லாந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
சிங்கப்பூர் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு சிங்கப்பூர் இரண்டு இடங்கள் முன்னேறியது.
2023ஆம் ஆண்டில் நாடு 5ஆவது இடத்தில் வந்தது. ஊழலுக்கு எதிரான Transparency International’s Corruption Perceptions Index அமைப்பு பட்டியலை வெளியிட்டது.
அதில் டென்மார்க்கும், பின்லாந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தன.
பொதுத் துறையில் பதிவாகும் ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஊழல் அற்ற நாடுகளை அமைப்பு தரவரிசைப்படுத்துகிறது.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஆசியப் பசிபிக் நாடுகளில் நியூசிலந்தை முந்திக்கொண்டு சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது.
அமைப்பின் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த ஒரே ஆசிய நாடும் சிங்கப்பூர்தான்.