இலங்கையில் இன்னும் 01 மணி நேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் என அறிவிப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/power-1.jpg)
இலங்கையில் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மின்சாரம் வழமைக்கு திரும்பும் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின்சார விநியோகத்தில் சுமார் 50% ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை 11.15 மணியளவில் தீவு முழுவதும் இந்த மின் தடை ஏற்பட்டது.
பாணந்துறை மின்சார துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் ஏற்பட்ட சூழ்நிலையே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)