சீனாவில் விமானத்தின் இருக்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட பட்டாசு : விசாரணைகள் ஆரம்பம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/china-4.jpg)
சீனாவில் விமானத்தின் இருக்கைக்கு அடியில் பட்டாசு இருப்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சீனாவின் குய்லினில் இருந்து சியாமெனுக்குச் செல்லும் ஷான்டாங் ஏர்லைன்ஸ் விமானம் SC2270 இல் பட்டாசு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் பயணி பட்டாசைக் கண்டுபிடித்து, அதை ஒரு விமானப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
தான் கண்டெடுத்த பட்டாசைக் காட்டும் இந்தக் காட்சிகளை அவர் ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். அத்துடன் அவர் ஷான்டாங் ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை புகார் ஹாட்லைனையும் அழைத்ததாகவும், தற்போது காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
விமான நிறுவனமும் அதிகாரிகளும், விமானங்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வது கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், போலியானவை கூட தடைசெய்யப்பட்டுள்ளன என்றும் பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளனர்.
பட்டாசு விமானத்தில் எப்படி வந்தது என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.