சீனா தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள தீர்மானம்
சீனாவைச் சார்ந்திருக்கும் நடவடிக்கைகளைக் குறைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் ஆதரவளித்துள்ளனர்.
ஒன்றியத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான தலைவர் Josep Borrell , சீனாவை ஓர் பங்காளியாகப் பார்க்கும் அதே வேளையில், அரசியல் எதிரியாகவும் கருதவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ரஷ்ய-உக்ரேன் போருக்கு முன்னர், ஒன்றியம் ரஷ்யாவின் எரிபொருளை அதிகம் சார்ந்திருந்ததை அவர் மேற்கோளாகக் காட்டினார்.
அதை ஓர் உத்திபூர்வத் தவறு என்றும் Borrell வருணித்தார். அரிய பூமிக் கனிமங்களையும் முக்கிய தொழில்நுட்பங்களையும் பெறுவதற்கு ஒன்றியம் இன்றைய நிலையில் சீனாவுடன் இன்னும் கூடுதலாகப் பணியாற்றுகிறது.
ஆனால் அந்த நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டியதில்லை என்பதை Borrell தெளிவுப்படுத்தினார். ஒரு சமமான அணுகுமுறையைப் பின்பற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத் துறைகள் சீனாவை மிதமிஞ்சிச் சார்ந்திருப்பதைக் குறைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கான பரிந்துரைகள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது