சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம்!
சிங்கப்பூரில் வெப்பநிலை நேற்றைய தினம் 37 பாகை செல்ஸ்சியஸாய்ப் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசியச் சுற்றுப்புற அமைப்பு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியான 40 ஆண்டுகளுக்கு முன்பு சாதனை அளவை எட்டிய நிலையில் நேற்றைய தினம் இந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது..
சிங்கப்பூர் 1929ஆம் ஆண்டில் வெப்பநிலையைப் பதிவு செய்ய ஆரம்பித்தது.
நேற்நு சிங்கப்பூரில் பல இடங்களில் வெப்பநிலை 36 டிகிரி செல்ஸ்சியஸைத் தாண்டியதாகத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் Facebook பக்கத்தில் தெரிவித்தது.
இன்று வெப்பநிலை தொடர்ந்து சூடாக இருக்கும் என்றும் அடுத்த வாரம் குறுகியகாலத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரின் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸ்சியஸைத் தொட வாய்ப்பில்லை என அமைப்பு கூறியிருந்தது.