துருக்கி நிலநடுக்கத்தின் ஆராத சுவடுகள் : இது ஒரு படுகொலை என கோஷமிட்ட மக்கள்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/thu.jpg)
தெற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் ஒன்றுக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் 53,000 க்கும் மேற்பட்டோர் மற்றும் அண்டை நாடான சிரியாவில் சுமார் 6,000 பேர் உயிரிழந்த பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்ட சரியான தருணத்தை அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பெரிய பதாகையை ஏந்திச் சென்றனர். அதில் நாங்கள் மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். அவர்களைப் பொறுப்பேற்க வைப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஒரு பூகம்பம் அல்ல, இது ஒரு படுகொலை!” என்று அவர்கள் கோஷமிட்டனர், அவர்களின் குரல்கள் இரவு முழுவதும் பயங்கரமாக எதிரொலித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆளும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யக்கோரி பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் இருந்து வெளிவந்த கோபத்தின் வெளிபாடே இந்த போராட்டம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புப் படையினர் தடுப்புகளை அமைத்து, அணிவகுப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை அடைவதைத் தடுத்தனர்.