இலங்கை: மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவுகளை ரத்து செய்யும் ரயில்வே திணைக்களம்
கொழும்பு – கோட்டை – பதுளை மற்றும் தலைமன்னார் புகையிரதங்களில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கான முன்பதிவு வசதியை திங்கட்கிழமை (10) முதல் ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், இந்த பெட்டிகள் சாதாரண மூன்றாம் வகுப்பு பெட்டிகளாக தொடர்ந்து செயல்படும். இந்த பெட்டிகளுக்கு வழக்கமான டிக்கெட்டுகளை வழங்க திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதேவேளை, புகையிரத பொது முகாமையாளரின் பணிப்புரைக்கு அமைய மலையக புகையிரத பாதையில் புகையிரத பயணச்சீட்டு கட்டணத்தை திருத்தும் தீர்மானம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை தற்போதுள்ள கட்டணமே அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)