ஆஸ்திரேலியா

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் பென்னி வோங்

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் புதன்கிழமையன்று (5) தலைநகர் கேன்பராவில் தெரிவித்தார்.

பாலினச் சமத்துவம் நாட்டில் நிலவும் அமைதியைக் காட்டுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவன நிகழ்வு ஒன்றில் அமைச்சர் வோங் கூறினார்.

பெண்களின் பாலியல், இனப்பெருக்க சுகாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் நிதி தொடர்பான விவகாரங்களில் பெண்களைச் சேர்த்துக்கொள்வதும் ஆஸ்திரேலியாவின் புதிய அனைத்துலகப் பாலினச் சமத்துவ உத்தியின் இலக்காகும்.

“உலகெங்கும் பெண்களுக்கு எதிராகப் பாலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதுமட்டுமல்லாது, பாலியல், இனப்பெருக்க சுகாதாரச் சேவைகள் போதுமான அளவில் அவர்களுக்குக் கிடைப்பதில்லை,” என்று வோங் கூறினார்.

பசிபிக் வட்டாரத்தில் மூன்றில் இரு பெண்கள் உடல்ரீதியிலான அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாவதாக அவர் கூறினார்.

உலகளாவிய நிலையில், 380 மில்லியன் பெண்கள், சிறுமிகள் கடும் வறுமையில் வாடுவதாகவும் 2.4 பில்லியன் பெண்களுக்கு சமமான பொருளியல் வாய்ப்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 

(Visited 48 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!