கண்பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்
இன்றைய காலகட்டத்தில், பலருக்கு சிறு வயதிலேயே, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. டிஜிட்டல் உபகரணங்களின் அதிக அளவிலான பயன்பாடு காரணமாக, சிறு வயதிலேயே கண் பார்வை குறைவதுடன், கண்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. வயது ஏற ஏற கண்பார்வை குறைவது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், டிஜிட்டல் இயக்கத்தில், குழந்தைகள் கூட சிறு வயதிலிருந்தே தடிமனான கண்ணாடியை அணிகிறார்கள்.
நம் உடலின் விலைமதிப்பற்ற உறுப்பான கண் மூலம் தான் , உலகின் அழகைக் காண முடிகிறது. இதனால், அதனை பாதுகாப்பது அவசியம். எனவே, கண் பார்வை பாதிக்கும் நிலை ஏற்படுவதை தவிர்க்க, கண் பார்வையை கூர்மையாக்க உதவும் உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள (Health Tips) வேண்டும். பொதுவாகவே, கண் பார்வை கூர்மை என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது, காரட் தான். ஆனால், இதைப் போலவே கண் பார்வை கூர்மைக்கு உதவும் உணவுகள் உள்ளன.
கீரை, முட்டைக்கோஸ், போன்ற பச்சை இலை காய்கறிகளில் லுடீன் மற்றும் பல சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்த இரண்டு சத்துக்களும் கண்களின் விழித்திரைக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. இது கண்பார்வையையும் மேம்படுத்துகிறது.
இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், பாகற்காய், மாம்பழம் மற்றும் ஆப்ரிகாட் போன்ற ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் ஏ வடிவமான பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இது பார்வைக் குறைபாட்டை மேம்படுத்துகிறது. குறிப்பாக மாலைக் கண் நோயை தீர்க்க மிகவும் உதவியாக இருக்கும்.
மீன்
ஆரோக்கிய கொழுப்பான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சால்மன் மற்றும் டுனா போன்ற எண்ணெய் மீன்களில் (Fish Food) காணப்படுகின்றன. இந்த கொழுப்பு அமிலங்கள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது கண் உலர்வு பிரச்சனையில் இருந்து விடுபடவும், விழித்திரையில் ஏற்படும் பாதிப்பில் இருந்து விரைவாக மீட்கவும் உதவுகிறது.
பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி (Berries)ஆகியவை கண்களுக்கு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. பார்வையை அதிகரிப்பதோடு, கண் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கவும் இது செயல்படுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் (Banana) வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். இது கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. வைட்டமின் ஏ, நல்ல பார்வைக்கு மிக அவசியமான கார்னியாவைப் பாதுகாக்கிறது.
சோம்பு
சோம்பு என்னும் பெருஞ்சீரகத்தில் (Fennel Seeds) வைட்டமின் ஏ, சி மற்றும் மினரல்கள் இருப்பதால் கண்பார்வையை கூர்மையாக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களும் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. கண் பார்வையை மேம்படுத்தும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் உள்ளன. எனவே, ஆயுர்வேதத்தில் சோம்பு ‘நேத்ரஜோதி’ என்று அழைக்கப்படுகிறது.