கிரேக்க தீவில் பதிவான 200 நிலநடுக்கங்கள் : முன்னெச்சரிக்கைகளை தீவிரப்படுத்திய அதிகாரிகள்!

கிரேக்க எரிமலைத் தீவான சாண்டோரினியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்ட பதிவானதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து பிரபலமான கோடை விடுமுறை இடங்களிலும் – முன்னெச்சரிக்கைகள் உத்தரவிடப்பட்டன.
மேலும் அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள்” என்று சிவில் பாதுகாப்பு அமைச்சர் வாசிலிஸ் கிகிலியாஸ் தெரிவித்துள்ளார்.
4.7 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கங்கள் சாண்டோரினியின் செயலற்ற எரிமலையுடன் தொடர்புடையவை அல்ல என்று கிரேக்க நிபுணர்கள் கூறினாலும், நில அதிர்வு நடவடிக்கையின் வடிவம் கவலைக்குரியது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
(Visited 20 times, 1 visits today)