சிரிய நகரத்தின் புறநகர் பகுதியில் கார் குண்டு வெடிப்பு : 15 பேர் பலியானதாக தகவல்!

சிரிய நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கார் குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு மற்றும் போர் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மன்பிஜ் நகரின் புறநகரில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டிசம்பரில் ஜனாதிபதி பஷார் அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், வடகிழக்கு அலெப்போ மாகாணத்தில் உள்ள மன்பிஜ் பகுதியில் வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
(Visited 18 times, 1 visits today)