நள்ளிரவுக்கு 90 வினாடிகளுக்கு அருகில் இருக்கும் டூம்ஸ்டே கடிகாரம் – ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!
டூம்ஸ்டே கடிகாரத்திற்கான புதுப்பிப்பை நிபுணர்கள் குழு இன்று (28.01) அறிவிக்க உள்ளனர்.
அறிவிப்பின் பின் பேரழிவிற்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியும் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் அணு ஆயுதங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு டூம்ஸ்டே கடிகாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1947 முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயப் பயன்படுத்தப்படும் கடிகாரம், தற்போது நள்ளிரவுக்கு 90 வினாடிகளில் அளவிடப்படுகிறது.
இது இவ்வளவு நெருக்கமாக இருப்பதற்கான காரணம் உக்ரைன் போர் மற்றும் புதிய அணு ஆயுதங்கள் என்று விஞ்ஞானிகள் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)