ஆஸ்திரேலியா

பொருளாதாரத்தை மேம்படுத்த மின்னிலக்கத் திறனாளர்களை ஈர்க்கும் வகையில் விசா விதிகளை தளர்த்தியுள்ள நியூசிலாந்து

இணையம் வாயிலாக வேலை செய்வோரை தன்பக்கம் ஈர்க்கும் வகையில் நியூசிலாந்து தனது வருகையாளர் விசாவுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தும் வேலை செய்யக்கூடிய திறனாளர்களால் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும் என்று நியூசிலாந்து நம்புகிறது.அதனால், நலிவடைந்துள்ள தனது பொருளியலுக்கு புத்துணர்வூட்டும் வகையில் திங்கட்கிழமை (ஜனவரி 27) விசா கட்டுப்பாடுகளைத் தளர்க்கும் அறிவிப்பை நியூசிலாந்து நிதி அமைச்சர் நிக்கோலா வில்லிஸ் வெளியிட்டார்.

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணியாக வரும் வெளிநாட்டினர் ஒன்பது மாதங்கள் வரையில் அங்கு தங்கி இருக்கலாம். ஆனால், அவர்கள் வெளிநாட்டு முதலாளிகளுக்காக வேலை செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. அந்தக் கட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டு உள்ளதாக வில்லிஸ் கூறினார்.“முற்றிலும் புதிய வகை வருகையாளர்களுக்காக விசா தனது கதவுகளைத் திறந்துள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலகத் திறனாளர்களை வரவேற்கும் இடம் என்னும் பட்டியலில் நியூசிலாந்தையும் இடம்பெறச் செய்யும் வகையில் புதிய விதிமுறைகள் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் எண்ணுவதாக அவர் தெரிவித்தார்.

“சுற்றுப் பயணிகளுக்காக விசாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அவர்கள் நியூசிலாந்து நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதில் மாற்றமில்லை.எனவே நியூசிலாந்து குடிமக்களின் வேலைகளுக்குப் போட்டியாக வெளிநாட்டினர் இருக்க மாட்டார்கள்,” என்றும் திருவாட்டி வில்லிஸ் விளக்கினார்.

2024 மூன்றாம் காலாண்டில் நியூசிலாந்து பொருளியல் நிலவரம் மந்தநிலைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு மோசமாக இருந்தது. அதனைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாக உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்பத் திறனாளர்களை வரவேற்கும் பிரசார விளம்பரங்களை நியூசிலாந்து வெளியிட உள்ளதாக அவர் கூறினார்.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் திறனாளர்களைப் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய ஊழியர்களோடு அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களையும் நியூசிலாந்து வரவேற்பதாகக் கூறினார்.

இணையம் வாயிலாகப் பணிபுரியும் மின்னிலக்கத் திறனாளர்கள் அதிக வருவாய் ஈட்டுக்கூடியவர்கள் என்பதால் கடைகள், உணவகங்கள் மற்றும் தங்குவிடுதிகளில் வர்த்தகம் பெருகும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

(Visited 42 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!