ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தேசிய தினத்தைக் கொண்டாடும் போராட்டத்தால் நினைவுச்சின்னங்கள் சேதம்

ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்கள் ஜனவரி 26ஆம் திகதி தொடங்குவதற்கு முன் மெல்பர்ன் நகரில் உள்ள இரு வரலாற்றுச் சிறப்புடைய சிலைகள் சேதமாக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் இந்நாள், கொண்டாடுவதற்கானதல்ல என்று கூறிவருகையில் அவர்களுக்கு ஆதரவாக நாடெங்கும் பத்தாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் இறங்குவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நாசவேலை நடந்துள்ளது.

நாட்டின் இரண்டாவது ஆகப்பெரிய நகரை நிறுவியவரான ஜான் பேட்மன் என்பவர், பழங்குடி மக்கள் பலரின் படுகொலைக்கும் காரணமாக இருந்தார். இந்நிலையில், அவரின் சிலை இரண்டு துண்டுகளாக்கப்பட்டதுடன் முதலாம் உலகப் போரின் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நினைவுச்சின்னம், சிவப்புநிற சாயத்தில் பூசப்பட்டது.

ஆஸ்திரேலிய தினத்திற்கு முன்தினம் இரு நினைவுச்சின்னங்களும் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டதுடன் ‘மீண்டும் நிலம் வேண்டும்’ என்ற சொற்களும் எழுதப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

சிட்னி கோவ் என்ற இடத்தில் கேப்டன் ஜேம்ஸ் கூக் வந்திறங்கியதும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு உள்ளானதையும் குறிக்கும் ஜனவரி 26ஆம் திகதி, ஆஸ்திரேலியாவின் தேசிய தினமாக அனுசரிக்கப்பட்டாலும் அது ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்குச் சர்ச்சைக்குரிய ஒரு தினமாக விளங்குகிறது.

மெல்பர்னின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் 30,000 வரையிலானோர் தெருக்களில் படையெடுத்து ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கக்கூடும் எனக் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!