இஸ்ரேலில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து தாக்குதல் – 5 பேர் காயம்
இஸ்ரேலின் Tel Aviv நகரில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை நடத்திய 28 வயது நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.
அதிகாரிகள் அதை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்தியுள்ளனர்.
காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலின் அவசர மருத்துவச் சேவைப் பிரிவு கூறியது.
சென்ற சனிக்கிழமை டெல் அவிவ் நகரில் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றது. அதில் ஒருவருக்குக் கடும் காயம் ஏற்பட்டது. தாக்குதலை நடத்தியவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
(Visited 27 times, 1 visits today)





