Instagramஇல் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் போடலாம்
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி சனிக்கிழமையன்று தளத்தில் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்தார்.
அது பயனர்கள் இப்போது யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாகிராமிலும் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடலாம் எனக் கூறியுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் பயனர்கள் 90 நிமிடங்கள் வரை மட்டுமே ரீல்ஸ் பதிவிட முடியும்.
யூடியூப் தனது ஷார்ட்ஸ் கொள்கையைப் புதுப்பித்த சில மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்காவில் எதிர்பார்க்கப்பட்ட டிக் டாக் தடை அறிவிப்புக்கு சில மணி மணிநேரங்களுக்கு முன்பும் இன்ஸ்டாகிராம் இந்த அப்டேட்டை அறிவித்தது.
மொசெரி வெளியிட்ட ரீல்ஸ் பதிவில், இன்றில் இருந்து 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடலாம். இன்ஸ்டாகிராமில் short-form வீடியோக்களுக்கு கவனம் செலுத்த விரும்பினோம். ஆனால் 90 வினாடிகள் மிகக் குறைவாக உள்ளது என்று creators கோரிக்கை வைத்தனர். அதனால் இப்போது இதை மாற்றி உள்ளோம் என்று கூறினார்.
அதோடு இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு அப்டேட் வர உள்ளது. ஐகானிக் square profile grids பதிலாக rectangular வடிவதில் மாற்ற உள்ளதாக கூறியுள்ளது.