செய்தி விளையாட்டு

மீண்டும் ரஞ்சி தொடரில் களமிறங்கும் விராட் கோலி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

மேலும், அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு BCCI ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதும் இடம்பெற்று இருந்தது.

இதையடுத்து, இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.

வருகிற ஜனவரி 30ம் தேதி ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்க உள்ளார்.

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி