அமெரிக்க கப்பல்களுக்கு அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு – பனாமா கால்வாயை வாங்க சபதமிட்டுள்ள ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாயை “திரும்பப் பெறுவதாக” சபதம் செய்துள்ளார், இது மத்திய அமெரிக்க நாட்டிற்கு அமெரிக்காவால் “முட்டாள்தனமாக” வழங்கப்பட்டது என்று கூறினார்.
வாஷிங்டன் டி.சி.யில் தனது பதவியேற்பு விழாவில் தனது உரையின் போது, அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க கடற்படை உட்பட, முக்கிய நீர்வழியைப் பயன்படுத்தும் அமெரிக்க கப்பல்களுக்கு கடுமையான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் நியாயமாக நடத்தப்படவில்லை” என்று கூறினார்.
இந்நிலையில் அதனை மீளவும் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் பனாமாவின் ஜனாதிபதி ஜோஸ் ரால் முலினோ, கால்வாய் “பனாமாவாகவே உள்ளது மற்றும் தொடர்ந்து இருக்கும்” என்று X இல் பதிலளித்துள்ளார்.
மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 1970 களில் தனது ஜனாதிபதி காலத்தில் பனாமாவிற்கு கால்வாயை வழங்குவதில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.